கொரோனா கண்காணிப்பு மையத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் அலர்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கண்காணிப்பு மையத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் 'அலர்ட்'

Added : மார் 23, 2020
Share

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில், சுகாதாரத்துறையினருடன், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், 24 மணி நேரமும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.சூலுார் அடுத்த கருமத்தம்பட்டி தேஜா சக்தி கல்லுாரியில், கொரோனா தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் கோவை வரும் பயணிகள், இந்த கண்காணிப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என, பரிசோதிக்கப்படுகின்றனர்.பாதிப்பு இல்லாதவர்கள் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இங்கு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உள்ளார். சுகாதாரத்துறையினருடன் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற கோவை கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும், இரவு, 8:00 முதல் காலை, 8:00 மணி வரையிலும், தலா ஒன்பது அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X