பொது செய்தி

தமிழ்நாடு

சுய ஊரடங்கு; காய்கறி மண்டிகள் முடக்கம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:கொரோனா தடுப்பு நடவடிக்கையை அடுத்து, மேட்டுப்பாளையம் நகரில் கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் மோடி, நேற்று காலை, 7 மணியிலிருந்து இரவு வரை, நடமாட்டத்தை தவிர்த்து, வீட்டை விட்டு வெளியே வராமல், மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.நகரில் மருந்துக் கடைகளும், பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. பஸ் ஸ்டாண்ட், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேட்டுப்பாளையம், அன்னுார் சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. நீலகிரியில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும், கொண்டு வரப்படும் இங்கிலீஷ் காய்கறிகள், இங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அடுத்து, அனைத்து மண்டிகளும் அடைக்கப்பட்டிருந்தன. மண்டிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் வெளியூர்களிலிருந்து, இரவில் லாரிகளில் காய்கறிகளைக் கொண்டு வந்தவர்கள், மண்டிகளில் இறக்க ஆட்கள் இல்லாததால், லாரிகளை சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களின் அடியில் நிறுத்தி வைத்துள்ளனர்.மக்கள் ஊரடங்கை அடுத்து, சாலைகளின் ஓரங்களில் இருந்தவர்களும், வெளியூர்களிலிருந்து பஸ் மற்றும் ரயில்களில் விடியற்காலை வந்தவர்களும் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.இவர்களுக்கு சத்குரு சாய் சேவா சங்கத்தினர், சி.எஸ்.ஐ., சர்ச் அமைப்பினர், ஐக்கிய ஜமாத் பேரவையினர், நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பினர் ஆகிய அமைப்பினர் ஒன்றிணைந்து, சமையல் செய்து உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், காலை, மதியம் ஆகிய இரு வேளைகளுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X