பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திரமாக பணி செய்தோம்! சுகாதார ஊழியர்கள் பெருமிதம்

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சுதந்திரமாக பணி செய்தோம்!  சுகாதார ஊழியர்கள் பெருமிதம்

சென்னை : சென்னையில், சாலை, தெருக்கள் வெறிச்சோடியதால், சுதந்திரமாக சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள முடிந்தது என, சுகாதார ஊழியர்கள் பெருமிதம் கொண்டனர்.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், சுகாதாரத் துறை தீவிரமாக செயல்படுகிறது. நேற்று, மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், மலேரியா ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.குறிப்பாக, கிருமி நாசினியால், துடைப்பது, தெளிப்பது போன்ற பணிகள் செய்தனர். இதற்கு, கையடக்க இயந்திரங்கள், சிறிய, பெரிய வாகனங்கள் பயன்படுத்துகின்றனர்.சாதாரண நாட்களில், போக்குவரத்து நெரிசல், மக்கள் ஒத்துழைக்காமை போன்ற சில காரணங்களால், சில பகுதிகளில், சுகாதார நடவடிக்கையை முழு வீச்சுடன் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.

நேற்று, பொதுமக்கள் வீடுகளில் இருந்ததால், பொது இடங்களில் அவர்கள் நடமாட்டம் இல்லை. இதனால், சுகாதார நடவடிக்கையை ஊழியர்கள் சுதந்திரமாக செய்தனர்.தெருக்கள் வெறிச்சோடியதால், துப்புரவு ஊழியர்கள், வீடுகளில் எளிதாக குப்பை சேகரித்து, தெருக்களை சுத்தம் செய்தனர்.இது குறித்து, மலேரியா ஊழியர்கள் கூறியதாவது:சாதாரண நாட்களில், வாகன நெரிசலால், குறிப்பிட்ட நேரத்தில் சுகாதார நடவடிக்கை முடிக்க முடிவதில்லை. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும், எங்கள் பணிகள் பாதிக்கப்படும். சிலர் இடையூறு செய்வர். அதுபோன்ற எந்த பிரச்னையும் இல்லாமல், நேற்று பணி புரிந்தோம். செய்த பணி திருப்தியாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X