பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுத்த, 'அம்மா' உணவகம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட, 'அம்மா' உணவகங்கள் அட்சயபாத்திரமாய் உதவியது. நேற்று, மாநகராட்சி மூலம், அம்மா உணவகங்களை சுற்றி, கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளித்து, சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அம்மா உணவகத்தில் இருந்த பெண் ஊழியர்கள், காலையில் சாப்பிட வந்தவர்களிடம், இங்கு மதியமும் உணவு கிடைக்கும், நம்பிக்கையோடு வந்து பசியாறுங்கள் என்று, பரிவுடன் கூறி, நெகிழ வைத்தனர்.கிண்டி: சென்னையில், நேற்று, மக்கள் ஊரடங்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், துணை ஆணையர்கள் குமரவேல் பா ண்டியன், ஆல்பிஜான் வர்க்கீஸ், தலைமை பொறியாளர் மகேசன் ஆகியோரை கொண்ட குழு ஆய்வு செய்தனர்.இரவு காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோரிடம், வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். கிண்டி, ஆலந்துார் பகுதியில் ஆய்வு பணியை முடித்த இவர்கள், 160வது வார்டில் உள்ள, 'அம்மா' உணவகம் சென்று, இட்லி, பொங்கல் சாப்பிட்டனர்.திருவொற்றியூர்: மற்ற மாவட்டங்களில் இருந்து, சென்னை வந்து தங்கி, தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பேச்சுலர்கள் அதிகம்.

அவர்கள், பெரும்பாலும் உணவிற்கு, கேன்டீன்கள், மெஸ், உணவகங்கள், ஓட்டல்களையே நாடியிருப்பர். தவிர, தெருவோர வாசிகளும், உணவிற்கு ஓட்டல்களை நம்பியே இருப்பர். இந்நிலையில், நேற்று, ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததால், இவர்கள் உணவிற்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், மாநகராட்சியின் அம்மா உணவகங்கள் செயல்பட்டதால் ஆறுதல் அடைந்தனர்.அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த கொரட்டூர், பாடி மேம்பாலத்திற்கு கீழே, 'வானமே கூரையாக, சாலையே வீடாக' நாக்பூரை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் தங்கி உள்ளனர்.

நேற்று, சாலையோர உணவு கடைகள் ஏதும் இன்றி, அவர்கள் தவித்தனர். இது குறித்து, அம்பத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. உடனடியாக, பாடி மேம்பாலம் அருகில் உள்ள, அம்மா உணவகத்தில், அவர்கள் அனைவரும் காலை, பகல் உணவு சாப்பிட ஏற்பாடு செய்தார். மேலும், அவர்களின் குழந்தைகளுக்கு, பிஸ்கட் பாக்கெட்டுகளும் கொடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X