பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய பணிகளிலும் சுய ஊரடங்கு அமலாக்கம்! மரத்தடி 'பெஞ்சு'களும் காலியாக வெறிச்சோடியது

Added : மார் 23, 2020
Share
Advertisement
 விவசாய பணிகளிலும் சுய ஊரடங்கு அமலாக்கம்! மரத்தடி 'பெஞ்சு'களும் காலியாக வெறிச்சோடியது

உடுமலை:கிராமங்களில், சுய ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, விவசாய பணிகளுக்கு கூட தொழிலாளர்கள் செல்லவில்லை; மரத்தடி 'பெஞ்சு'களும் காலியாகவே காணப்பட்டன.'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் இது குறித்து விழிப்புணர்வு, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. 'பந்த்' போன்ற நாட்களில், கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாது. அப்போது, விவசாய சாகுபடி பணிகளும் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும். ஆனால், நேற்று சுய ஊரடங்கு உத்தரவுக்கு, உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.வெறிச்சோடிய விளைநிலங்கள்சுய ஊரடங்கு காரணமாக, நேற்று விவசாய சாகுபடி பணிகளுக்கு யாரும் செல்லவில்லை. உடுமலை தினசரி சந்தைக்கும் விடுமுறை விடப்பட்டிருந்ததால், தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் பறிக்கக்கூட தொழிலாளர்கள் செல்லவில்லை.காலை 7:00 மணிக்குள், பால் உற்பத்தியாளர்கள் மட்டும், 'ஆவின்' மற்றும் தனியார் பால் சேகரிப்பு நிலையங்களுக்கு சென்று, பால் ஊற்றி விட்டு திரும்பினர். பால் சேகரிப்பு வாகனங்கள் மட்டும், அனைத்து கிராமங்களுக்கும் இயக்கப்பட்டது. குடிமங்கலம், பெதப்பம்பட்டி, தேவனுார்புதுார், எரிசனம்பட்டி, ஜல்லிபட்டி, தளி போன்ற கிராம சந்திப்பு மையங்களிலும், அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் இறைச்சிக்கடைகள், குறிப்பிட்ட நேரத்துக்கு இயங்கின.கிராமங்களில், முதியவர்களின் சந்திப்பு மையமாக மரத்தடி பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருக்கும். நிழல் தரும் மரங்களின் கீழ், பல மணி நேர அரட்டையடிக்கும், இந்த மரத்தடி பெஞ்சுகளும் நேற்று வெறிச்சோடியிருந்தது.மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய ரோடுகளில் போலீசார் அவ்வப்போது ரோந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X