பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் உடல்நலம் பெற்றோர்களுக்கு அறிவுரை

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:கோடைநோய்களிலிருந்து மாணவர்களின் உடல்நலத்தை காப்பதிலும், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கோடை துவங்கியுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தண்ணீர் அதிகம் குடிப்பதற்கு ஆசிரியர்கள் வகுப்புகளில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். மேலும், கோடை வெப்பத்தால், குழந்தைகளுக்கு பல்வேறு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதனால், அந்த நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது, உணவு பழக்கவழக்கங்கள் என அனைத்தும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கினர். தற்போது, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதன் பாதிப்பை தவிர்க்க, மாணவர்கள் வீட்டிலேயே இருக்க அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், மாணவர்கள், கோடை காலத்துக்கான முறையான உணவு பழக்கம் இல்லாதபோது, வெப்பநோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். இதனால், பெற்றோர், வெப்பநோய்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு பழக்கங்களை பின்பற்றவும், இரண்டு முறை குளிப்பது, அதிகம் தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து பின்பற்ற செய்வதும் வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X