பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடக்கழிவுகளால் பாதிப்பு நடவடிக்கை அவசியம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை சித்தக்குட்டை பகுதியில், கட்டட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை-தாராபுரம் ரோட்டில், இந்திரா நகர் சித்தக்குட்டை பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள நீர்நிலைகளை ஒட்டி, கட்டட கழிவுகளை கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், அங்குள்ள வாய்க்கால் பாலம் அருகில், கட்டட கழிவுகளை கொட்ட முயன்ற வாகனத்தை அங்குள்ள மக்கள் சிறைபிடித்தனர். சம்பவ இடத்துக்கு, அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டட கழிவுகளை கொட்டி, நீர்நிலைகளை பாழ்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X