பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடத்தில் தற்காலிக குழாய்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் மக்கள் கை கழுவ, குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சுகாதார துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குடிநீர் வாரிய ஜட்டர் லாரியில், தண்ணீருடன் கிருமி நாசினி கலந்து, பிரதான சாலைகளில் தெளிக்கப்பட்டு வருகிறது.இதில், வளசரவாக்கம் மண்டலம் ஆற்காடு சாலை, மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், கோடம்பாக்கம் மண்டலம், கோயம்பேடு பஸ் நிலையம், தி.நகர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில், 9,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் லாரியில், 270 கிலோ பிளீச்சிங் பவுடர் கலந்து தெளிக்கப்பட்டது. இதைபோல் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், கை கழுவுவதற்காக, தற்காலிக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், வளசரவாக்கம் மண்டலத்தில், போரூர், மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிலையம் என, ஐந்து இடங்களில், தற்காலிக குழாய்கள்வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X