சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருங்குடி மண்டலத்தில் 10 கடைகளுக்கு, 'சீல்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

பெருங்குடி : பெருங்குடி மண்டலத்தில் தொழில் உரிமம் பெறாத, 10 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

பெருங்குடி மண்டலத்தில் தொழில் உரிமம், வரி செலுத்தாத, 30க்கும் மேற்பட்ட கடைகள் அடையாளம் காணப்பட்டன.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அவற்றுக்கு முனிசிபல் சட்டம் - 1919, பிரிவு 279, 287, 288, 309 ஆகியவற்றின் கீழ், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.அடுத்தகட்டமாக, சென்னை மாநகராட்சி சட்டம் - 379 (ஏ) (1) ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதையும் உதாசீனப்படுத்தி, 10 கடைகள் தொழில் உரிமம் எடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து, பெருங்குடி, பாலவாக்கம் பகுதியில் உள்ள, 10 கடைகளுக்கு, மண்டல அலுவலர் பாஸ்கரன் உத்தரவின்படி, உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X