பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு: உடுமலை சந்தை இன்று செயல்படாது

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

உடுமலை:கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 'மக்கள் ஊரடங்கு' அமல்படுத்தியதால், நேற்றுமுன்தினம், உடுமலை நகராட்சி சந்தையிலுள்ள, கமிஷன் கடைகளுக்கு நேற்று முன்தினம், விடுமுறை அளிக்கப்பட்டது. விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வரவில்லை; வியாபாரிகள் வரத்தும் இல்லை.நேற்று, 'மக்கள் ஊரடங்கு' காரணமாக, சந்தை வளாகம் பூட்டப்பட்டது. இதனால், உள்ளே இருந்த 350க்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டன. ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டன; தள்ளுவண்டி கடைகளும் செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளதால், இன்று உடுமலை சந்தை மூடப்படுகிறது. காலையில் நடக்கும் கால்நடை சந்தையும், நாள்முழுவதும் நடக்கும் வாரச்சந்தையும் செயல்படாது. நகராட்சி சந்தை வளாகம் மூடப்படும், என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், இன்றும் நகராட்சி சந்தை செயல்படாது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202011:43:30 IST Report Abuse
Ram Pollachi பத்து ரூபாயிக்கு விற்ற தக்காளி இன்று இருபத்து ஐந்து, பச்சை மிளகாய் இருபதிலிருந்து நூறாக மாறிவிட்டது ஒரே நாளில். வரும் நாட்கள் எப்படி போகுமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X