பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவகம் திறப்பு மக்களிடம் வரவேற்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகரில், நேற்று திறக்கப்பட்டிருந்த, 'அம்மா' உணவகத்துக்கு, அனைத்து தரப்பினரிடமும், வரவேற்பு கிடைத்தது.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுய ஊரடங்கை பின்பற்ற பிரதமர் வலியுறுத்தினார். இதற்கு உடுமலை பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மருந்தகங்கள், 'அம்மா' உணவகத்துக்கு, ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.அதன்படி, உடுமலை நேதாஜி மைதான ரோட்டிலுள்ள, 'அம்மா' உணவகம் வழக்கம் போல் செயல்பட்டது.ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கும், நடைபாதை ஆதரவற்றோருக்கும், இந்த உணவகம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. காலையில், இட்லி, மதியம், சாம்பார், தயிர் சாதம் வினியோகிக்கப்பட்டது. உணவு தயாரித்த, பணியாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, பணியாற்றினர். சாதம் வினியோகிக்கும் போதும், உரிய இடைவெளி விட்டு, பரிமாறப்பட்டது.நகரில், 'அம்மா' உணவகம் மட்டும் இயங்கியதால், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X