பொது செய்தி

தமிழ்நாடு

சேவைகளுக்கு 'ஆன்லைன்' முறையை பின்பற்றுங்கள்! மக்களுக்கு நிறுவனங்கள் வேண்டுகோள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:'கொரோனா' பரவலைத் தடுக்க 'ஆன்லைன்' சேவைகளை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என, வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.'கொரோனா' தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு நிறுவனங்களும், தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. அவ்வகையில், நேற்று நடந்த சுய ஊரடங்கு குறித்து, முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு, தனிப்பட்ட அழைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தின.அதில், 'கொரோனா' சுய ஊரடங்கில், பங்கேற்கவும், தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்காக கைத்தட்டவும் வலியுறுத்தப்பட்டது. இதே போல், பிற சேவை நிறுவனங்களும், 'கொரோனா' தடுப்புக்காக ஆன்லைன் சேவைகளை பின்பற்ற, வலியுறுத்தியுள்ளன. அவ்வகையில், சேம நல நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் 'உமாங்' செயலி மூலம், 'பிராவிடண்ட் பண்ட்' குறித்த நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் சேவைக்காக வங்கி கிளை மற்றும் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதை தவிர்க்கவும், சேவைகளை பெற ஆன்லைன் முறையைப் பின்பற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X