பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் பசியாற்றிய 'அம்மா' உணவகம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

எழும்பூர் : ஏழை, எளியோரை மனதில் கொண்டு, 'அம்மா' உணவகத்தை திறந்து, அனைவரது பசியையும் தீர்த்த, தமிழக அரசை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கோவில்கள், மால்கள், பார்கள் உள்ளிட்டவைகளும் மூடப்பட்டன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களாகவே, ஊரடங்கு மேற்கொண்டு, வீடுகளிலேயே இருக்கும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அவரது வேண்டுகோள் ஏற்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் ஏழை, எளியவர்கள் உணவின்றி சிரமபடக்கூடாது என்பதற்காக, அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று ஏழை, எளியவர்கள் அம்மா உணவகத்தில்,தங்கள் பசியை போக்கினர். தமிழக அரசின் இந்தநடவடிக்கைக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X