பொது செய்தி

தமிழ்நாடு

40 எம்.எம்1 - 23.3.20

Added : மார் 23, 2020
Share
Advertisement

கட்சியும், ஆட்சியும்'நியூஸ் ஜெ., டிவி'யில் தினமும் இரவு, 9:30 மணிக்கு ஆட்சி, அதிகாரம், அரசியல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் தமிழக அரசின் சாதனை மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுடன், சட்டசபை நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.அ.தி.மு.க., மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டங்களும் இதில் ஒளிபரப்பாகின்றன. இருந்த இடத்தில் இருந்தே கட்சி, ஆட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை இதில் காணலாம்.எஸ்கேப் ஆனது ஏன்?குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. தொடர்ந்து தங்கை, நாயகியின் தோழியாக நடித்தவருக்கு நாயகியாகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. அதன்பின் சின்னத்திரை தொடர்களில் நடிக்க தொடங்கினார்.இதுவரை, 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். 'விஜய்டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'அரண்மனைக்கிளி' தொடரில் நடித்து வந்தார். சமீபத்தில், இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.இது குறித்து தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், நீலிமா ராணி கூறியிருப்பதாவது:குழந்தை பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். தற்போது சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. போய் வா துர்கா, நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். ரசிகர்களும், நண்பர்களும் தான் என் பலம். எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்துங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அவரது இப்பதிவால், நீலிமா, பெரிய தொடர் ஒன்றிலோ அல்லது சினிமாவிலோ நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் நடிகையரை போல் நீலிமாவும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி, அப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருந்தார். இதற்கு முன், 'நிறம் மாறாத பூக்கள்' என்ற சின்னத்திரை தொடரை தயாரித்தார். அதுபோல் புதிய தொடரை கூடதயாரிக்கலாம் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X