பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவில் சாதித்தோருக்கு விளையாட்டு உபகரணங்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை : தேசிய அளவில் வெற்றி பெற்ற, சென்னை மாவட்ட வீரர் - வீராங்கனையருக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

கடந்த, 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2019 மார்ச், 31 வரை நடைபெற்ற, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.இதற்காக, தகுதியுடைய வீரர் - வீராங்கனையர், தங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை, அடுத்த மாதம், 3ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த அலுவலகம், 'எண் 30, ஷெனாய் நகர் நீச்சல் குளம், கிழக்கு கிளப் ரோடு, ஷெனாய் நகர், சென்னை - 30' என்ற முகவரியில் உள்ளது.அலுவலகத்தை, 044 - 2664 4794 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X