பொது செய்தி

தமிழ்நாடு

காண்டூர் கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பு: திருமூர்த்தி அணை நீர் மட்டம் உயர்வு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 காண்டூர் கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பு: திருமூர்த்தி அணை நீர் மட்டம் உயர்வு

உடுமலை:பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாயில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன., 27ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.21 நாட்கள் தண்ணீர் திறப்பு, ஏழு நாட்கள் இடைவெளி என்ற அடிப்படையில், சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்களாக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்றுக்கு, 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு, பிப்., 18ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு, பிப்.,26ல் தண்ணீர் திறக்கப்பட்டு, கடந்த, 2ல் நிறைவு செய்யப்பட்டது. முதலாம் மண்டல பாசன காலம், மழையில்லாமல், வறட்சியான சூழலில் துவங்கிய நிலையில், திட்ட தொகுப்பு அணைகளில் குறைந்தளவே நீர்இருப்பு உள்ளது. அதோடு, ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், கடந்த மூன்று மாதமாக, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, பரம்பிக்குளம் அணை வழியாக, காண்டூர் கால்வாயில், தினமும், வினாடிக்கு, சராசரியாக, 550 முதல் 650 கன அடி வரை மட்டுமே நீர்வரத்து நிலவியது.இதனால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் போதிய அளவு உயராமல், வரத்து குறைவு, பாசனத்திற்கு பிரதானக்கால்வாயில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், போதிய வேகம் மற்றும் அழுத்தம் இல்லாமல் பாசனக்கால்வாய் மற்றும் நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, காண்டூர் கால்வாயில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, சராசரியாக, 800 அடி வரை நீர்வரத்து உயர்ந்துள்ளது. மூன்றாம் சுற்று தண்ணீர் திறப்பு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த, 20ம் தேதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 24.10 அடியாக உள்ளது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 28.25 அடியாக காணப்பட்டது. நீர் இருப்பு, 790.22 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 708 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 93 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. இரு நாட்களில், நான்கு அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தது. நேற்றுமுன்தினம் முதல், நேற்று காலை வரை, திருமூர்த்தி அணையில், 2 மி.மீ., மழையும், நல்லாற்றில், 15 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X