பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட மகளிர் திட்டம் மூலம் முக கவசம்: அரசு அலுவலகங்களில் விற்பனை

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி முக கவசம் கிடைக்கும் வகையில், மகளிர் குழுக்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, மாவட்டத்தில், கிருமி நாசினி திரவம் மற்றும் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மகளிர் திட்டம் மூலம், மருத்துவக்குணம் மிகுந்த முகக்கவசம் வாங்கி விற்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட மகளிர் திட்ட பிரிவு மூலம் விற்பனை துவங்கியுள்ளது.மகளிர் திட்ட அலுவலர் கோமகன் கூறியதாவது:மருத்துவக்குணம் மிகுந்த, மூன்றடுக்கு துணியால் தயாரிக்கப்பட்ட முக கவசம், விற்பனைக்கு வந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து வாங்கி, மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, கலெக்டர் அலுவலகத்தில் விற்பனை துவங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட் என, மக்கள் எளிதில் வந்து வாங்கும் இடங்களில், விற்பனை மையம் அமைக்கப்படும். மகளிர் குழுவினர் மூலம், முகக்கவசம் விற்பனை பணி நடக்கும்.முக கவசம் ஒன்று, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, மாவட்ட மக்களும், கிராமப்புற மக்களும், மகளிர் குழுவினர் விற்கும், முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தலாம். முதல்கட்ட விற்பனைக்காக, 10 ஆயிரம் முகக்கவசங்கள் மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X