பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வழிச்சாலையாக உள்ள பிரதான வழித்தடம் : அதிகரிக்கும் விபத்துக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

உடுமலை:தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும், பிரதான போக்குவரத்து ரோடு, குறுகலாக உள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.கோவை, பொள்ளாச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, மாநில நெடுஞ்சாலையை இணைக்கும், கெடிமேடு பிரிவிலிருந்து, திருமூர்த்திமலை, உடுமலை- ஆனைமலை ரோடு என மாநில, மாவட்ட ரோடுகளை இணைக்கும், பிரதான வழித்தடமாக உள்ளது.இந்த வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாயம், காற்றாலை, கயிறு தொழிற்சாலை என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. கிராம மக்கள் மட்டுமின்றி, அதிகளவு கனரக வாகன போக்குவரத்து உள்ள ரோடாகவும் உள்ளது. சுற்றுலா தலமான திருமூர்த்திமலைக்கு செல்லும், முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும், 10 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டில், 6 கி.மீ., துாரம் அகலப்படுத்தப்பட்டது. ஆனால், உடுமலை தாலுகாவில், விளாமரத்துப்பட்டி முதல், 4 கி.மீ., துாரம் ரோடு அகலப்படுத்தப்படாமல், ஒரு வழிச்சாலையாக உள்ளது. ரோடும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல், எதிரே வாகனங்கள் வந்தால், இரு சக்கர வாகனங்கள் கூட ஒதுங்க முடியாமல், வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்த ரோட்டை முழுமையாக அகலப்படுத்தி, இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X