நேரத்தை வீணாக்க மாட்டோம் : போக்குவரத்து போலீசார் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேரத்தை வீணாக்க மாட்டோம் : போக்குவரத்து போலீசார் அசத்தல்

Added : மார் 23, 2020
Share
குன்னுார்:குன்னுார் பகுதி போக்குவரத்து இன்றி, வெறிச்சோடிய நிலையில், காவல் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், நேரத்தை வீணாக்காமல் விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.கொரோனா வைரஸ் ஒழிக்க, மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று, நீலகிரியில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்துவரும் போக்குவரத்து

குன்னுார்:குன்னுார் பகுதி போக்குவரத்து இன்றி, வெறிச்சோடிய நிலையில், காவல் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், நேரத்தை வீணாக்காமல் விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.கொரோனா வைரஸ் ஒழிக்க, மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று, நீலகிரியில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்துவரும் போக்குவரத்து போலீசாருக்கு நேற்று, சற்று பணிச்சுமை குறைந்தது.இதில், குன்னுார் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில், காவலர் சுந்தரபெள்ளி உட்பட போக்குவரத்து போலீசார் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீரமைப்பு பணி இல்லாத நிலையில், தங்களுக்கு கிடைத்த நேரத்தை வீணாக்காமல், 'பேரிகாட்'களில், போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டினர். மேலும், லெவல் கிராசிங், சிக்னல், போலீஸ் நிழற்குடையை சீரமைத்தனர். மேலும், காட்டேரியில் இருந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள்; நடந்து சென்றவர்களை, கார் மூலம் காட்டேரிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X