பொது செய்தி

தமிழ்நாடு

சேவா பாரதி அமைப்பு போலீசாருக்கு மதிய உணவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டியில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு சேவா பாரதி அமைப்பு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.உலகை அச்சுறுத்தி வரும் 'கொரோனா' நோயை ஒழிக்க சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பொதுமக்கள் தாங்களாகவே சுகாதாரத்தை பேண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் 'சுய ஊரடங்கு' உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ஊட்டி நகரில் அனைத்து கடை, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டினுள் தஞ்சமடைந்தனர்.பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், ஊட்டி நகரில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, ஊட்டி சேவா பாரதி அமைப்பின் மாவட்ட தலைவர் பிரகாஷ், செயலாளர் உமா முன்னிலையில், மதிய உணவு வழங்கப்பட்டது. அதேபோல், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அங்குள்ள குடியிருப்பை சேர்ந்த, குணசேகரன் என்பவர் தேநீர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X