பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' எதிரொலி: கிராமத்திற்குள் வெளியாட்களுக்கு தடை

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோத்தகிரி:'கொரோனா' காரணமாக, கோத்தகிரி தாந்தநாடு கிராமத்திற்குள் வெளியாட்கள் வர தடை விதித்து, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.கோத்தகிரியில், பல்வேறு கிராமங்களில் நேற்று நடைபெற இருந்த மாரியம்மன் திருவிழா, சுய ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. மக்கள் கூடுவதை தவிர்க்க, ஆடல் பாடல், தேர்பவனி தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள தாந்தநாடு தொட்டூர் கிராமத்தில், கோவில் பூஜாரி உட்பட, ஐந்து பேர் மட்டுமே, நடையை திறந்து பூஜை செய்தனர். மேலும், அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், நோய் தொற்று வராமல் தடுக்கவும், கிராம மக்கள் ஒருங்கிணைந்து, 19ம் தேதி முதல், 15 நாட்கள், கிராமத்துக்குள் வெளியாட்கள் வர தடை விதித்து, கிராம எல்லையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உறுப்பினர், நஞ்சு சுப்ரமணி கூறுகையில், ''கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, எங்கள் கிராமத்தில், மாரியம்மன் திருவிழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. நோய் தொற்று வராமல் இருக்க, மக்கள் ஏகமனதாக முடிவெடுத்து, 15 நாட்கள் வெளியாட்கள் கிராமத்திற்குள் வர தடை விதித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். கிராமத்தில் இருந்து வெளியே சென்றவர்கள், மீண்டும் கிராமத்திற்குள் வரும்பட்சத்தில், சோப்பு போட்டு கை கழுவிய பின்பே வரவேண்டும் என்பதற்காக, கிராம எல்லையில் சோப்புடன், தண்ணீர் வைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X