பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபட்ட மலை மக்கள்: மாலை நேரத்தில் மாவட்டம் முழுவதும் எழுந்த கரவொலி...

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஊட்டி:கொரோனாவை ஒழிக்க, நீலமலை மக்கள் ஒன்றுபட்டு, தங்கள் முழு ஆதரவை வெளிபடுத்தினர்.' கொரோனா' நோயை ஒழிக்கும் நோக்கில், மாவட்ட சுகாதார துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி விடுத்த சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து,மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் முடங்கி தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.ஊட்டி பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ், தினசரி மார்க்கெட், தாவரவியல் பூங்கா சாலைகளில் காலை முதல் மாலை வரை போலீசாரை தவிர, ஒருவர் கூட காணப்படவில்லை.* குன்னுார் பஸ் ஸ்டாண்ட், மவுன்ட் ரோடு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், பெட்போர்டு உட்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு கடைகள் கூட திறக்கப்படவில்லை.வெலிங்டன் ராணுவ பகுதிகள், சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சாலைகளில் ஒரு வாகனம் கூட காணப்படவில்லை.தேயிலை எஸ்டேட்களில், இலை பறிக்காமல், தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வீடுகளில் இருந்து வெளியே யாரும் வராமல் ஒத்துழைப்பு நல்கினர்.அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அம்மா மருந்தகம் உட்பட அனைத்து மருந்தகங்களும் அடைக்கப்பட்டன.* கூடலுார், பந்தலுாரில், மக்கள் வெளியில் நடமாடாமல் வீடுகளில் முடங்கியதுடன், தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை தோட்டங்கள், வியாபார நிறுவனங்களும், அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.தமிழக, கேரளா, கர்நாடக மாநில மக்கள் அதிகளவில் வந்து செல்லும், எல்லையோர பகுதிகளான பாட்டவயல், தாளூர், சோலாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.மாநில எல்லை சோதனை சாவடிகளில் போலீசார், மருத்துவ குழுவினர், 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் ஏதும் இயக்காவிட்டாலும் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர கால வாகனங்கள் சென்றால், அது குறித்து ஆய்வு செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் குழுவினர், அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதார பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.மாலை, 5:00 மணி முதல், 5:05 மணிவரை, மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே, மக்கள் நின்று தட்டுகளை தட்டியும்; கரவொலி எழுப்பியும், கொரோனா நோயை ஒழிக்க பாடுபடும் அனைவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X