பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் பெண்ணுக்கு 'கொரோனா' உறுதி : மருத்துவ கண்காணிப்பில் குடும்பத்தினர்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;கோவையில், இளம்பெண் ஒருவருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் கல்வி பயின்று வரும், கோவையை சேர்ந்த, 32 வயது பெண், அங்கிருந்து, டில்லி, பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தடைந்து, பெங்களூருவில் இருந்து ரயிலில் பயணித்து, கடந்த, 17ம் தேதி கோவை வந்தார்.இந்நிலையில், இவருக்கு திடீரென, காய்ச்சல் மற்றும் சளி

கோவை;கோவையில், இளம்பெண் ஒருவருக்கு 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டில் கல்வி பயின்று வரும், கோவையை சேர்ந்த, 32 வயது பெண், அங்கிருந்து, டில்லி, பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தடைந்து, பெங்களூருவில் இருந்து ரயிலில் பயணித்து, கடந்த, 17ம் தேதி கோவை வந்தார்.
இந்நிலையில், இவருக்கு திடீரென, காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டதையடுத்து,கடந்த, 19ம் தேதி, கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.பரிசோதித்த டாக்டர்கள், பெண்ணிடம், போக்குவரத்து தகவல் பெற்ற பின், 'கொரோனா' வார்டில் அனுமதித்தனர். அவரிடமிருந்து, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில், அவருக்கு 'கொரோனா' தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சிங்காநல்லுார், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தவிர, கோவை அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், கோவை, திருப்பூர், ஒடிசா, பீகார் ஆகிய பகுதிகளை சேர்ந்த, மொத்தம், 6 பேர், 'கொரோனா' அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு மருத்துவமனை 'டீன்' அசோகன் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த டாக்சி டிரைவர், போக்குவரத்தில் தொடர்புடையவர்கள், ஆரம்பத்தில் சிகிச்சையளித்த டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் என அனைவரையும், கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202009:49:55 IST Report Abuse
Ram Pollachi ஏதோ அம்மாடி உன் தயவால் என்ன செய்ய முடியுமே அதை செய்துவிட்டாய். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்த சூழ்நிலையில் அவசரப்பட்டு தாயகம் திரும்ப வேண்டாம் அது வீட்டிற்கும் நம் நாட்டிற்கும் செய்யும் மிகப் பெரிய சேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X