கோவையில் ரயில்வே ஸ்டேஷன்கள் வெறிச்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ரயில்வே ஸ்டேஷன்கள் 'வெறிச்'

Added : மார் 23, 2020
Share
கோவை:கோவை வழியாக நேற்று ஒன்பது ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், ஸ்டேஷன்கள் வெறிச்சோடின.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தெற்கு ரயில்வேயில் அனைத்து பயணிகள் ரயில், பெரும்பாலான இன்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சேலம் கோட்டத்தில், 35 இணை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.கோவையில் இருந்து புறப்படும் பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ்,
 கோவையில் ரயில்வே ஸ்டேஷன்கள் 'வெறிச்'

கோவை:கோவை வழியாக நேற்று ஒன்பது ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், ஸ்டேஷன்கள் வெறிச்சோடின.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தெற்கு ரயில்வேயில் அனைத்து பயணிகள் ரயில், பெரும்பாலான இன்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சேலம் கோட்டத்தில், 35 இணை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.கோவையில் இருந்து புறப்படும் பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி, மங்களூரு எக்ஸ்பிரஸ், டில்லி கொங்கு எக்ஸ்பிரஸ் உட்பட, 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பணிமனையில் நிறுத்தப்பட்டன.கோவை வழியாக, சென்னை எக்மோர் - மங்களூரு, தன்பாத் - ஆலப்புழா, பாட்னா - எர்ணாகுளம், சில்சர் - திருவனந்தபுரம், திருநெல்வேலி - பிலாஸ்பூர் உட்பட ஒன்பது ரயில்கள் மட்டுமே கடந்து சென்றன. இதிலும், மிகவும் சொற்ப அளவிலான பயணிகளே கோவை வந்திறங்கினர்.இதேநிலை, போத்தனுார், வடகோவை உட்பட ஸ்டேஷன்களிலும் காணப்பட்டது. பஸ் போக்குவரத்து இல்லாததால் அவர்கள் செய்வதறியாது தவித்தனர். கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள், வெளியே காத்திருந்தனர். ரயில்கள் இயங்காது என, அரசு ஏற்கனவே அறிவித்தும், அதை பொருட்படுத்தாத பயணிகளே காத்திருந்ததாக, ரயில்வே அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் சிலர், பொதுமக்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டது, அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X