அ.தி.மு.க., பிரமுகர் உணவகத்துக்கு சீல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் உணவகத்துக்கு 'சீல்'

Added : மார் 23, 2020
Share
 அ.தி.மு.க., பிரமுகர் உணவகத்துக்கு 'சீல்'

சூலூர்:சூலூர் அருகே சட்டவிரோதமாக, மது விற்ற அ.தி.மு.க., பிரமுகரின் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்த நாளில், மது பாட்டில்களை விற்பனை செய்வது சட்ட விரோதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேராசை பிடித்த சிலர், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.சூலூர் அடுத்த பாப்பம்பட்டி ரோடு, நடுப்பாளையம் பிரிவில் இருக்கும் ஏ ஒன் ரெஸ்டாரன்ட் கடையில் இப்படி சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் கருப்புசாமிக்கு சொந்தமான இந்த உணவகத்தில் நேற்று டாஸ்மாக் மேலாளர் தேவிகா ராணி தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது உறுதி செய்யப்பட்டது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்த அவர்கள், ரெஸ்டாரன் டுக்கு சீல் வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X