சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், தாத்தா சடலங்களுடன் 3 நாள் இருந்தவரும் தற்கொலை

Added : மார் 23, 2020
Share
Advertisement
 தாய், தாத்தா சடலங்களுடன் 3 நாள் இருந்தவரும் தற்கொலை

திருப்பூர்:திருப்பூரில், தாய், தாத்தா இறந்த நிலையில், சடலங்களுடன் மூன்று நாட்களாக இருந்தவரும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரில் வசித்தவர் வெள்ளியங்கிரி, 71. இவரது மகள் அபர்ணா, 46; தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, ஜித்தி, 17 என்ற மகன் இருந்தார்.நேற்று முன்தினம் மாலை, ஜித்தி, கோவையில் உள்ள உறவினர் வினோத் என்பவரை, மொபைல் போனில் அழைத்து, 'தாய் மற்றும் தாத்தா இறந்து மூன்று நாட்களாகிறது' என்று கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், ரூரல் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஒரு அறையில், அபர்ணா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில், வெள்ளியங்கிரியும், இன்னொரு அறையில், ஜித்தியும் துாக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தனர். மூவரின் உடல்களையும், பிரேதப் பரிசோதனைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.மரண வாக்குமூலம்தற்கொலைக்கு முன், மொபைல் போனில், உறவினரிடம் மெல்லிய அழுகுரலுடன் ஜித்தி பேசிய ஆடியோ போலீசுக்கு கிடைத்தது. அதில், 'தாத்தாவும், அம்மாவும் இறந்துட்டாங்க. அவுங்க இறந்து, மூணு நாள் ஆச்சு. நானும் சாகப் போகலாம்னு இருந்தேன். என்னால சாக முடியல மாமா. என்ன பண்ணறதுனு தெரியல. அம்மா, என்கூட பேசிட்டு இருக்கும் போதே செத்துட்டாங்க. தாத்தா அதைப் பாத்துட்டு துாக்கு போட்டுட்டாரு. விஷம் குடிச்சு பார்த்தேன்; துாக்கு போட்டு பார்த்தேன்; கை அறுத்து பார்த்தேன், ஆனா சாக முடியல.
இப்ப நான் மட்டும் தான் அனாதை. பாட்டி, ஆறு மாசத்துக்கு முன்னாடி இயற்கையாக இறந்தாங்க. அவங்க இறந்ததை யாருகிட்டயும் சொல்லல. இப்ப நான் என்ன பண்றது? எனக்கு பயமா இருக்கு' என்று, உருக்கத்துடன் பேசுகிறார்.விசாரணையில் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்:வெள்ளியங்கிரி, பனியன், நுால் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி வசந்தம் கோகிலம். மகள் அபர்ணா, திருமணமாகி சில ஆண்டுகளிலேயே, கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்தார். பின், கணவர் இறந்து விட்டார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், வறுமைக்கு தள்ளப்பட்டதால், சொந்த வீட்டை விற்று விட்டு, ஜெய்நகரில் வாடகை வீட்டில், வெள்ளியங்கிரி, வசந்தம்கோகிலம், அபர்ணா, ஜித்தி ஆகியோர் குடியேறினர். சில ஆண்டுகளாக, உறவினர்கள், நண்பர்கள் என, யாரிடமும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை.ஆறு மாதங்களுக்கு முன், வசந்தம் கோகிலம் உடல் நலமின்றி இறந்தார். இவர் இறந்ததை, உறவினர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
இதற்கிடையே, அபர்ணாவும் உடல் நலமின்றி இருந்துள்ளார். ஜித்தி மொபைல்போனில் உறவினரிடம் பேசுகையில், தனது தாய் இயற்கையாகவே இறந்தார் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அபர்ணாவும் தற்கொலை செய்துகொண்டாரா என்பது, பிரேத பரிசோதனைக்கு பின்தான் தெரியவரும்' என்கின்றனர் போலீசார்.தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X