சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : மார் 23, 2020
Share
Advertisement

தீ விபத்தில் மூதாட்டி பலி

மதுரை: கீழ அண்ணாத்தோப்பு சின்னான் மனைவி லட்சுமி 70. இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் விளக்கை பற்ற வைக்கும்போது சேலையில் தீப்பற்றி பரவியது. காயமுற்றவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

கந்துவட்டி : ஒருவர் கைது

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின்ரோடு சக்திவேல் 41. இவர் வசந்தநகர் பிரபுவிடம் 38, ரூ.10 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கினார். தினமும் ரூ.200 செலுத்தினார். அவரிடம் கூடுதல் வட்டி கேட்டு பிரபு மிரட்டினார். சக்திவேல் புகார்படி கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் பிரபுவை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

இரு பெண்கள் மாயம்

மதுரை: வில்லாபுரம் குமரன் மனைவி ஸ்ரீதேவி 27. இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன் தினம் பணிக்கு சென்றவர் திரும்பவில்லை. குமரன் புகார்படி தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.பெத்தானியாபுரம் முருகேசன் மனைவி ராதாபாய் 60. இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மார்ச் 20 ல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

சைக்கிள்கள் திருட்டு

மதுரை: ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடம் வளாகத்தில் மாணவர்கள் நிறுத்தியிருந்த மூன்று சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி தப்பினர். மடத்தின் மேலாளர் ஜெகநாதன் புகார்படி தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

38 லிட்டர் கள் பறிமுதல்

மதுரை: தல்லாகுளம் எஸ்.ஐ., செல்வகுமார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வாலிபர் சென்ற டூவீலரை சோதித்த போது கேனில் 38 லிட்டர் கள்௦ இருந்தது. விசாரணையில் மீனாம்பாள்புரம் ஏ.எஸ்.எம். மன்சில் தெருவை சேர்ந்த அனிப் 22, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மது அருந்திய சகோதரர்கள் பலி

வாடிப்பட்டி: வாடிப்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன்கள் மர வேலை செய்யும் ஆசாரி சிவக்குமார் 39, டிரைவர் வினோத்குமார் 30. இருவரும் தங்கள் நண்பர் மாயி மகன் தங்கபாண்டியுடன் 32, நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். இதில் வாந்தி மயக்கமுற்ற சகோதரர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணிக்கு சிவக்குமார், நேற்று காலை 6:00 மணிக்கு வினோத்குமார் இறந்தனர். தங்கபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X