பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கராத்தே போட்டி: மாணவர்கள் சாதனை

Added : மார் 23, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் கோஜூ காய் கராத்தே பள்ளி சார்பில் நடந்த மாநில கராத்தே போட்டிகளில் வேர்ல்டு கோஜூ ரியு கராத்தே பள்ளி மாணவர்கள் அதிக பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

'கட்டா' பிரிவில் வெற்றி பெற்றோர் விவரம்: 6 வயதினரில் என்.எம்.எஸ். விஜயலட்சுமி சஞ்சீவி மலையான் பள்ளி மாணவர் ஜெகப்பிரியன் வெண்கலம் வென்றார். ஏழு வயதினரில் அப்பள்ளி மாணவர் நகுல் தங்கம் வென்றார். ஓம் சாதனா பள்ளி மாணவர் ஹிமேஷ் வர்ஷித் வெள்ளி, அரபிந்தோ மீரா பள்ளி மாணவர் பாலச்சந்தர் வெண்கலம், ஏழு வயது மாணவியர் பிரிவில்எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி வெண்ணிலா வெண்கலம், எட்டு வயது பிரிவில் அரபிந்தோ மீரா பள்ளி மாணவர் வெற்றிமாறன் தங்கம், கே.எம்.ஆர்., பள்ளி மாணவர் தருண் வெள்ளி, எட்டு வயது மாணவியர் பிரிவில் கேரன் பள்ளி மாணவி ஆர்த்தி வெள்ளி, விஜயலட்சுமி சஞ்சீவி மலையான் பள்ளி மாணவி செர்ரி வெண்கலம் வென்றனர். ஒன்பது வயது பிரிவில் ஓம் சாதனா பள்ளி மாணவர் ஹரி ஹித்தேஷ் தங்கம் வென்றார்.

ஒன்பது வயது சண்டை பிரிவில் பயோனியர் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவர் வருண் தங்கம், பத்து வயது பிரிவில் முத்துப்பட்டி சம்பக் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவர் நிதிஷ்குமார் தங்கம், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவர் கபில் கார்த்திக் வெள்ளி, 11 வயது பிரிவில் ஏ.வி.எம்.,பள்ளி மாணவர் பிரசன்ன ஸ்ரீராம் தங்கம், எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவர் கோகுலநாத் வெள்ளி, டி.வி.எஸ். பள்ளி மாணவர் நித்திக் வெண்கலம், 12 வயது பிரிவில் குருகுலம் பள்ளி மாணவர் அஜய்குமார் தங்கம், டி.வி.எஸ்., பள்ளி மாணவர் நிக்கில் வெள்ளி, ரூபி பள்ளி மாணவர் கோபிகிருஷ்ணா வெண்கலம், 12 வயது மாணவியர் பிரிவில் ரூபி பள்ளி மாணவி சமுத்திரா தேவி வெள்ளி, 13 வயது பிரிவில்அரபிந்தோ மீரா பள்ளி மாணவர் திவ்யன் சித்தார்த் தங்கம், 14 வயது பிரிவில் விகாசா பள்ளி மாணவர் ஜெய் விக்ணேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களை கராத்தே பள்ளி தலைவர் வித்யா, தொழில்நுட்ப இயக்குனர் வைரமணி, ஒருங்கிணைப்பாளர் பி.ராஜா, மாவட்ட செயலாளர் டி.ராஜா, பயிற்சியாளர் கார்த்திக் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X