சலசலப்பை ஏற்படுத்திய தி.மு.க., எம்.பி.,

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

புதுடில்லி: மறைந்த தமிழக முதல்வர்கள் -கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும், பார்லிமென்ட் வளாகத்தில், அ.தி.மு.க., மற்றும்- தி.மு.க., - எம்.பி.,க்களை ஒன்றாகவே பார்க்க முடியாது.



latest tamil news



தப்பித் தவறி, அவர்கள் ஒன்றாக நின்று சிரித்துப் பேசுவதை, பத்திரிகையாளர்கள் யாராவது பார்த்து விட்டால், 'இதையெல்லாம் எழுதி, எங்களுக்கு வேட்டு வைத்து விடாதீர்கள்' என, அவர்கள் கெஞ்சுவர்.

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இரண்டு கட்சி எம்.பி.,க்களும் சகஜமாக பேசி, சிரிப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில், ராஜ்யசபாவில், ரயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, அ.தி.மு.க., - எம்.பி., விஜிலா சத்யானந்த், தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டம் குறித்து, ஒரு கோரிக்கை வைத்தார்.உடனே, தி.மு.க., - எம்.பி.,யான, ஆர்.எஸ்.பாரதி எழுந்து, 'எம்.பி.,யாக ஓய்வு பெறும் விஜிலா பேசியதை நான் ஆதரிக்கிறேன். அவர், அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்தாலும், தமிழக திட்டம் குறித்து பேசியுள்ளதால், அதை, நாம் அனைவரும் ஏற்று, ஆதரிக்க வேண்டும்' என, விஜிலாவை பாராட்டிப் பேசினார்.


latest tamil news



இது, சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, 'என்ன இப்படி பேசுகிறீர்களே' என கேட்க, சபை சிரிப்பு, கை தட்டலால் அதிர்ந்தது.

சில, தி.மு.க., - எம்.பி.,க்கள், 'என்ன அண்ணே, இப்படி பாராட்டி தள்ளிட்டீங்களே' என, பாரதியிடம் கேட்டனர். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலரோ, பாரதியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர். அவர்களில் சிலர், விஜிலாவை, தி.மு.க., பக்கம் இழுக்க, பாரதி இப்படி பேசினாரோ எனவும் சந்தேகப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-மார்-202020:08:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அதாங்க அரசியல் நாகரிகம்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
23-மார்-202016:27:41 IST Report Abuse
Baskar மப்பில் மறந்து பொய் பேசி விட்டார் மன்னித்து விடுங்கள்.
Rate this:
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
23-மார்-202013:59:03 IST Report Abuse
Mano மக்களின் நன்மைக்கு அரசியல் பாகுபாடு பார்க்காமல் குரல் கொடுப்பது நல்லதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X