இந்தியா

திருநங்கைகள் மூலமாக கிருமி நாசினி உற்பத்திபற்றாக்குறையை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement
 திருநங்கைகள் மூலமாக கிருமி நாசினி உற்பத்திபற்றாக்குறையை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு, சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதனால், அனைத்து தரப்பினரும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை (ேஹண்ட் சானிடைசர்) பயன்படுத்தி வருகின்றனர்.தேவை திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளதால், கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை போக்குவதற்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக கிருமி நாசினி தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.

இதையடுத்து, காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உழவர்கரை நகராட்சியின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளித்து, கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தயாரிக்கும் பணிகள் துவங்கியது.திருநங்கைகளை கொண்டு கிருமி நாசினி தயாரிக்கும் பணிகளை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துவக்கியது.

திருநங்கைகள் சுய உதவிக் குழுவை சேர்ந்த பவதாரினி, ஹனி, ஹன்சிகா, அப்சரா ஆகிய 4 பேருக்கு, கிருமி நாசினி தயாரிக்கும் பயற்சியை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியின் வேதியியல் துறை பேராசிரியர்கள் அளித்தனர்.பவதாரினி எம்.சி.ஏ., அப்சரா எம்.எஸ்சி., படித்துள்ளார். ஹன்சிகா பி.ஏ., முடித்துள்ளார். ஹனி லேப் டெக்னிஷியன் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிருமி நாசினி தயாரிப்பதற்காக, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மூலதன நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழங்கியது.இதைதொடர்ந்து, கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை, திருநங்கைகள் உற்சாகமாக துவக்கி உள்ளனர். முதல் நாளன்று 50 லிட்டர் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தயாரிக்கும் கிருமி நாசினியை அரசு துறைகளுக்கு வினியோகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.திருநங்கைகள் சுய உதவிக் குழு மூலமாக கிருமி நாசினி தயாரிப்பது, நாங்கள் கேள்விப்பட்டவரை இதுவே முதல் முறை என்று நினைக்கிறோம்.

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், அவர்கள் சுயமாக தொழில் செய்வதற்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எடுத்து வருகிறது.அரியாங்குப்பம் வட்டாரத்தில் 123 திருநங்கைகளை உறுப்பினர்களாக கொண்டு 12 சுய உதவிக் குழுக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துவக்கி உள்ளது.

மேலும், இந்த 12 குழுக்களையும் ஒருங்கிணைத்து அக்னி சிறகுகள் என்ற பெயரில் திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டமைப்பும் நாட்டிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.ரவிப்பிரகாஷ் செயலர்,ஊரக வளர்ச்சித் துறை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X