இந்தியா

காரைக்காலில் மூன்று மையங்கள் தேர்வு

Added : மார் 23, 2020
Share
Advertisement

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக நலவழித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக முதல்வரின் செயலர் விக்ரந்தராஜா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆய்விற்கு பின்னர் முதல்வரின் செயலர் விக்ரந்தராஜா கூறியதாவது:முதல்வர் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை உள்ளிட்ட மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மக்கள் ஊரடங்கு மாவட்டத்தில் நுாறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்று அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X