இந்தியா

புதுச்சேரியில் மக்கள் ஊரடங்கு

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் ஊரடங்கு நேரத்தில், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாக்கள் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை தங்களின் வீடுகளில் இருந்து வெளியே வராமல், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு துணையாக இருந்தனர். புதுச்சேரியின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி கிடந்தன.பம்பரமாக சூழன்ற போலீசார்ஊரே வெறிச்சோடி கிடந்தாலும், போலீசார் நேற்று பம்பரமாக சுழன்று பணியாற்றினர். முக்கிய வீதிகளில் ரோந்து சென்றனர். ஐ.ஜி., சுரேந்தர் சிங், சீனியர் எஸ்.பி. ராகுல்அல்வால் மற்றும் எஸ்.பி.க்கள் அனைவரும் களத்தில் இறங்கி தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.எச்சரித்த போலீசார்ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்து 99 சதவீத மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும், ஒரு சிலர், சாலைகளில் பைக்கில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர்.பழரசம் அளித்த மக்கள்மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருந்தாலும், மக்கள் பாதுகாப்பிற்காக, போலீசார் மட்டும் நேற்று சாலையில் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, போலீசாருக்கு, சில இளைஞர்கள், மதிய நேரத்தில் பழரசம் தயாரித்து கொடுத்து, தங்களின் பணிக்கு எங்கள் பாராட்டுகள் என தெரிவித்து நெகிழ வைத்தனர்.மைக் மூலம் எச்சரிக்கைஅனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்கள் நேற்று காலை ஒலி பெருக்கி மூலம், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், தேசிய மக்கள் ஊரடங்கு தொடர்பாக முக்கிய சந்திப்புகளில் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X