இந்தியா

சாலையோர மக்களுக்கு உணவு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 சாலையோர மக்களுக்கு உணவு

புதுச்சேரி: ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட விளிம்புநிலை,ஆதரவற்ற முதியோர்களுக்கு புதுச்சேரி நகராட்சி, பல்வேறு அமைப்பினர் உணவு வழங்கினர்.கொரோனா தொற்றை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆனால் சாலையோரம் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது.சின்னவாய்க்கால் பிளாட்பாரத்தில் வசித்த விளிம்புநிலை மக்கள், தெ சைமன் கார்டிலால் பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு புதுச்சேரி நகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டது.ஊரடங்கு அமுலில் இருந்தாலும் புதுபஸ்ஸ்டாண்ட், கோவில் வாசல்களில் 80க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் உணவு கிடைக்காமல் தஞ்சமடைந்து இருந்தனர். அவர்களுக்கு புதுச்சேரி நகராட்சி மற்றும் நீர்நிலை பாதுகாப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் உணவு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X