இந்தியா

ஊரடங்கு உத்தரவின் போது வீட்டில் புகுந்த நல்லபாம்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement
 ஊரடங்கு உத்தரவின் போது வீட்டில் புகுந்த நல்லபாம்பு

வில்லியனுார்: ஊரடங்கு உத்தரவின் போது வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை வனத்துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர்.

வில்லியனுார் அடுத்த கொம்பாக்கம் குளத்துமேட்டு தெரு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் அருணாசலம்.சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று அருணாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:30 மணியளவில் நல்ல பாம்பு ஒன்று வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது.

அதனைக் கண்ட அருணாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிடவே பாம்பு, வீட்டில் இருந்து வெளியேறி மாடி படிக்கட்டு அருகே இருந்த சிறிய வலையில் புகுந்தது. உடன் அந்த வலையை அடைத்த அருணாசலம், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன் மற்றும் நாகராஜன் ஆகியோர் அருணாசலம் வீட்டின் மாடி படிக்கட்டு அருகே வலையில் இருந்த ஐந்து அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X