இந்தியா

புதுச்சேரி மாநிலமே நம்மை உற்று நோக்குகிறது!

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'சுகாதாரத் துறையினர் எதற்கும் கவலைப்படாமல், கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை மாகி பகுதியில் மட்டும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் ஒரு நபர்கூட பாதிக்கப்படவில்லை. இருந்தபோதும், சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம்.சுகாதாரத் துறைக்கு தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றன. எல்லையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், வெளியூர்களில் இருந்து கொரோனா தொற்றுடன் வருபவர்களை தடுத்து நிறுத்த முடியும்.டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால், புதுச்சேரி மாநிலமே நம்மை உற்று நோக்கி கொண்டுள்ளது.இந்த நேரத்தில்தான் சுகாதாரத் துறை எவ்வளவு வலிமையாக செயல்பட முடியும், ஒற்றுமையாக செயல்பட முடியும், தற்போதைய பிரச்னையை எதிர்கொண்டு எப்படி சாதுர்யமாக வெளியே வர முடியும் என்பதை எல்லாரும் சுகாதாரத் துறையினரை கண்காணித்துக் கொண்டுள்ளனர். எனவே, ஒன்றாக செயல்பட வேண்டும்.சுகாதாரத் துறையினருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும், மற்ற வசதிகளையும் அரசு செய்து தரும். நாம் எதற்கும் கவலைப்படாமல் கொரோனா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X