இந்தியா

டோல்கேட்டை கடந்த 93 வாகனங்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மக்கள் ஊரடங்கு காரணமாக மொரட்டாண்டி டோல்கேட்டில் 93 வாகனங்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளது.புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் மொரட்டாண்டியில் டோல்கட் உள்ளது. இந்த டோல்கேட்டை, விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் வாகனங்களும், பிற நாட்களில் 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும்.இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை 57 வாகனங்கள், மாலை 4:01 மணி முதல் இரவு 9:00 மணிவரை 36 வாகனங்கள் என மொத்தம் 93 வாகனங்கள் மட்டுமே டோல்கேட்டை கடந்து சென்றுள்ளன.வழக்கமாக மொரட்டாண்டி டோல்கேட்டில் தினசரி ரூ.3.5 லட்சம் வரை வசூல் ஆகும். மக்கள் ஊரடங்கு காரணமாக வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே வசூலானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X