144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்: கலெக்டர் அருண் வேண்டுகோள் | Dinamalar

இந்தியா

144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்: கலெக்டர் அருண் வேண்டுகோள்

Added : மார் 23, 2020
Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக வரும் 31ம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை கடைபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் மூலமும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமும் பொதுக்களிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று (நேற்று) நாடு முழுவதும் நடந்த சுய ஊரடங்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அடித்தளமாக அமையும். மக்கள் ஊரடங்கு முடிந்து இன்று (நேற்று) இரவு 9.00 மணிக்கு பின்னர் தொடங்கி வரும் 31ம் தேதிவரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவ சிகிச்சை, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற இதர பணிகளுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நாடு தழுவிய மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நல்கிய புதுச்சேரி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஊரடங்கு போலவே வரும் 31ம் தேதிவரைவரை 144 தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு கலெக்டர் அருண் தெரிவித்தார். புதுச்சேரி சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X