இந்தியா

இன்று கடைகள் திறந்திருக்குமா?

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: 'புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று முதல் திறந்திருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று இரவு 9:00 மணியில் இருந்து அமலுக்கு வந்துள்ள, 144 தடை உத்தரவு குறித்து, கலெக்டர் அருண் அளித்த விளக்கம்: சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. அனைத்து இடங்களிலும் 'சமூக விலகல்' எனப்படும் இடைவெளியை பொதுமக்கள் அனைவரும் பராமரிக்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்க கூடாது. கும்பல் கும்பலாக சேர்ந்து பேசக் கூடாது.அத்தியாவசிப் பொருட்களான அரிசி, மளிகை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், காய்கறி கடைகள், மருந்து கடைகள் எப்போதும்போல இன்று முதல் திறந்து இருக்கும். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. பொதுமக்கள் அச்சமின்றி எப்போதும்போல பொருட்களை வாங்கலாம். ஓட்டல்கள் உள்ளிட்டவைகளும் திறந்திருக்கும்.உள்ளூருக்குள் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருந்தபோதும், பொதுநலன் கருதி தேவையில்லாத இடங்களுக்கு செல்வதையும், சுற்றுவதையும் குறைக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X