இந்தியா

ஏ.எப்.டி., மில்லை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: ஏப்.எப்.டி., மில் மூடுவது தொடர்பாக, அரசின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தனியார் மூலம் நடத்தப்பட்ட புதுச்சேரி ஏ.எப்.டி. மில் கடந்த 1982ம் ஆண்டு மூட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசு மில்லை மூடுவதற்கு அனுமதி மறுத்து, அரசே கையகப்படுத்தி நடத்தியது.இப்போது நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஏ.எப்.டி.,நிர்வாகம் மில்லை மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளது. இதற்கு அனைத்து கட்சியினர், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏ.எப்.டி., மில் மூடுவது தொடர்பாக, அரசின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தொழிலாளர் துறை செயலர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவு:ஏ.எப்.டி., நிர்வாகம், தொழில் தகராறு சட்டத்தின்படி வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் தொழிலகத்தை மூடுவதற்கு கடந்த ஜனவரி 21 மற்றும் பிப்ரவரி 6ம் தேதி ஆகிய தேதிகளில் படிவம் கொடுத்துள்ளது. இதன்படி அரசானது உரிய சந்தர்ப்பம் கொடுத்து, விசாரணை மேற்கொண்டு நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள்,தொடர்புடையவர்களின் கருத்தை அறிய வேண்டும்.மேலும் நிர்வாகம் மூடுவதற்காக கூறியுள்ள காரணங்களின் உண்மை நிலையையும், அக்காரணங்கள் போதுமனதாக உள்ளதா என்பதை அறியவும், பொதுமக்கள் நலன் மற்றும் இதர காரணிகளையும் ஆராயவும், எழுத்து பூர்வமாக காரணங்களை பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மில்லை மூட அனுமதி கொடுக்காலாமா அல்லது மறுக்கலாமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணை நடத்தி, அந்த விசாரணை அறிக்கையை ஒருவாரத்திற்குள் அரசுக்கு அளிக்க வேண்டும். தொழிலாளர் துறை இந்த அதிகாரிக்கு தேவையான அலுவலக உதவிகளையும், அலுவலக இடம் போன்றவற்றை அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X