இந்தியா

புதுச்சேரி மக்களுக்கு அனுபவம் புதுமை

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: சுய ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கியதால், பறவைகளும், விலங்குகளும் நேற்று சுதந்திரமாக உலா வந்தன.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் சுய ஊரடங்கு நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு முழு ஆதரவு அளித்து, புதுச்சேரி மக்களும் வீடுகளுக்குள் முடங்கி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.காலையில் எழுந்திருக்கும்போது காது ஜவ்வு கிழியும் அளவுக்கு வாகனங்களின் சத்தங்களையே கேட்டு பழக்கப்பட்ட நகரத்து மக்களுக்கு, காகம், சிட்டுக் குருவி உள்ளிட்ட பறவைகளின் ஒலிகளை நேற்று கேட்டது புதுமையான அனுபவமாக இருந்தது.புதுச்சேரி முழுவதும் சத்தம் இல்லாமல் மிகுந்த நிசப்தமாக இருந்தது. பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களில் குயில்களின் இனிமையான ஓசையை கேட்க முடிந்தது. துாய்மையான காற்று தாலாட்டியது.நகரத்து வீதிகளில் நாய்களும், பூனைகளும், மாடுகளும் ஹாயாக உலா வந்தன. மனிதர்களை பார்த்து எப்போதும் பயத்துடன் மரங்களில் பதுங்கி இருக்கும் பறவைகள் சாலைகளில் இறங்கி நடை பயின்றன. பிளாட்பாரங்களில் அணில்கள் ஓடி விளையாடியதை காண முடிந்தது.காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தின் எதிரில் சாலையில் மயில்கள் நடை பயின்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X