இந்தியா

பொது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டாம்: புதுச்சேரி மக்களுக்கு டி.ஜி.பி., வேண்டுகோள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீ வத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்கை அமைதியாக கடைபிடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் அனைவரும் சுய கட்டுப்பாடுடன் இருந்து கொரானா வைரசை பராமல் நிறுத்த வேண்டும். மாநிலத்தில் நேற்று இரவு முதல் வரும் 31ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் மருத்துவமனை, தொலைதொடர்புதுறை, மளிகை கடைபோன்ற அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் அதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. நமது சுகாதார பணியாளர்கள் பெரும் முயற்சிகள் இருந்தபோதிலும், நமது சுகாதார பாதுகாப்பு முறையில் திறன் கருதி நிலமை மோசமடைவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. இது ஒரு தீவிரமான தொற்றுநோய். பரவாமல் நாம் அனைவரும் தனிப்பட்ட சுகாதாரத்துடன் மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது இந்த நோயை எதிர்த்து போராடு வதற்கு அவசியமான வழியாகும்.எனவே எந்த ஒரு சமூக, மதம், அரசியல், விளையாட்டு, இலக்கிய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடு ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் அறிவுறுத்தப்படுகிறது. இப்படி செய்தால் புதுச்சேரி மக்களை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.அதே சமயத்தில் எந்த ஒரு வதந்தியும் பரப்பி பீதியை உருவாக்க வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காவல்துறை 24 மணி நேரமும் தங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறது. அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில், தாங்கள் கட்டணமில்லா தொலைபேசியான 104, 100, 112 மற்றும் 1031 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X