மாப்பிள்ளைக்கு கொரோனா; திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்| Dinamalar

'மாப்பிள்ளைக்கு' கொரோனா; திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (16)
Share
திருப்பதி: பிரான்சில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டதால் அவரது திருமணத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு இளைஞர் கடந்த 12ம் தேதி ஐதராபாத் வந்தார். அவருக்கு வரங்கல் ராமண்ணாபேட்டையில் மார்ச் 19ம் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும்
coronavirus,Covid_19india,coronaupdatesindia,hyderabad,france,marriage,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

திருப்பதி: பிரான்சில் இருந்து வந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டதால் அவரது திருமணத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு இளைஞர் கடந்த 12ம் தேதி ஐதராபாத் வந்தார். அவருக்கு வரங்கல் ராமண்ணாபேட்டையில் மார்ச் 19ம் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தினர். அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அங்கு அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news




வெளிநாட்டிலிருந்து வந்த அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மீறி அவர் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவரின் திருமணத்திற்கு வந்த அனைவரும் பயத்தில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X