பார்லி., கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்: எம்.பி.,க்களுக்கு திரிணமுல் காங்., உத்தரவு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்' என, கட்சி எம்.பி.,க்களுக்கு திரிணமுல் காங்., கட்சி உத்தரவிட்டுள்ளது. கடிதம்திரிணமுல் காங்., கட்சி சார்பில், லோக்சாபாவில், 22 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 13 எம்.பி.,க்களும் உள்ளனர். பார்லி.,யில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு

புதுடில்லி : 'கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்' என, கட்சி எம்.பி.,க்களுக்கு திரிணமுல் காங்., கட்சி உத்தரவிட்டுள்ளது.



latest tamil news




கடிதம்


திரிணமுல் காங்., கட்சி சார்பில், லோக்சாபாவில், 22 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில், 13 எம்.பி.,க்களும் உள்ளனர். பார்லி.,யில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 'கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்' என, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களின் தலைவரான, டெரென் ஓ பிரையன் மற்றும் லோக்சபா தலைவர், சுதீப் பாண்டியோபாத்யாய் ஆகியோர், இரு சபைகளின் தலைமை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரஸ் காரணமாக, பார்லி.,யை ஒத்திவைக்குமாறு, கடந்த, 10 நாட்களாக எங்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 'மக்கள் குழுக்களாக ஒன்று கூடாமல், விலகி இருக்க வேண்டும்; 65 வயதிற்கு மேற்பட்டோர், கவனமாக இருக்க வேண்டும்' என, பிரதமர் கூறியுள்ளார்.


latest tamil news




அறிவுறுத்தல்


ராஜய்சபாவில், சுமார், 44 சதவீத எம்.பி.,க்களும்,லோக்சபாவில், 22 சதவீத எம்.பி.,க்களும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். இரு சபைகளிலும், 110 மணி நேர விவாதம் நடைபெற்றுள்ளது. அதில், 3 சதவீதம் மட்டுமே, கொரோனா பிரச்னை குறித்து விவாதிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், எம்.பி.,க்கள், அவர்களுக்கு உதாரணமாக இருக்கும் வகையில் பார்லி.,யை தொடர்ந்து நடத்துவதாக கூறப்படுகிறது; இது பொறுப்பற்ற நடவடிக்கை.எனவே, எம்.பி.,க்கள் அனைவரையும், பார்லி., கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்து, அவர்களின் தொகுதிகளுக்கு திரும்பி செல்லும்படி, திரிணமுல் காங்., அறிவுறுத்திஉள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மார்-202019:42:54 IST Report Abuse
 Muruga Vel சபைக்கு செல்லாமல் பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் மற்றும் சலுகைகளையும் பெறக்கூடாது ..ராணுவ வீரர்களும் கேம்பில் இருக்க கூடாதா ...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-202018:05:43 IST Report Abuse
Endrum Indian எம் பிக்கள் பார்லிமெண்டுக்கும் ராஜ்ய சபாவிற்கும் வருவது மக்கள் சேவைக்காக அல்லவே அல்ல என்று ஆணித்தரமாக கூறும் முஸ்லீம் பேகம் மும்தாஜ் கட்சி, டாஸ்மாக் நாட்டில் அதையே செய்யும் தி மு க சட்டசபை புறக்கணிப்பு???இவனுங்க எல்லாம் மக்கள் சேவைக்காக வரவேயில்லை????
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-மார்-202011:53:29 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தீய வைரஸ் அந்த ... தான் வந்த வினைதான் போராட்டம் வன்முறை .
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
23-மார்-202013:34:45 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஇந்தியாவிற்கே 7 1 / 2 பிடித்து 6 வருடம் ஆகிறது. இப்போது உச்சத்தில் இருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X