லண்டன் தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

லண்டன் : கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம் அடைந்தனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர்.


latest tamil news



தொடர்ந்து, லண்டனில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் 59 பேர் கொண்ட குழு ஒன்று நாடு திரும்ப முடியவில்லை. அவர்களில் 40 பேருக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், மற்ற 19 பேருக்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. அவர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு இரவில் உணவும், தங்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து வெளியே செல்ல மறுத்து வருகின்றனர். இதனால் அங்குள்ள விசா பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்டர் விடுமுறை தினத்தையொட்டி மாணவர்கள் இந்தியா வர திட்டமிட்டனர். ஆனால் கொரோனா நடவடிக்கையாக சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் புகார் கூறினர். மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sanath - shaisun,சிங்கப்பூர்
23-மார்-202019:10:59 IST Report Abuse
sanath மத்திய அரசு உறுதியாக இருக்கவேண்டும். இதுவரை நாட்டிற்குள் கொரோனா பரவியதே வெளிநாட்டில் இருந்து பயணம் மேற்கொணடவர்களினால் தான். இங்கே வந்து தனித்து இருக்கமாட்டேன் என்று அறிவுறுத்தல்களை மதிக்காததால் வந்த விளைவு இது. எனவே நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கவேண்டும். தூதரகம் தங்க இடம் அளித்தும் அடம் பிடிப்பவர்களை என்ன செய்வது
Rate this:
Share this comment
Cancel
Perumal - Chennai,இந்தியா
23-மார்-202013:02:14 IST Report Abuse
Perumal Why these carriers of Virus are brought back to India.They can get medical facilities there itself. Unnecessarily we are made to suffer because of them.India could have been in safer mode had they not brought these people.Govt should rethink on this.
Rate this:
Share this comment
Cancel
vijay - coimbatore,இந்தியா
23-மார்-202011:08:13 IST Report Abuse
vijay என்ன ஈஸ்டர் விடுமுறை தேவையா இருக்கு? வீட்டுக்குள்ளேயே தங்கி இருக்க வேண்டியதுதான? பக்கத்து ஊருக்கு, பக்கத்து மாவட்டங்களுக்கு போக முடியல, வெளிநாட்டுல இருந்து ஈஸ்டர் ஈஸ்டர் விடுமுறைக்கு வரலைன்னா உலகம் அழிந்துவிடாது, வந்தீங்கன்னா உங்களுக்கும், இங்கே இருக்கும் மக்களுக்கும் ஏதாச்சும் தீங்கு ஏற்பட வாய்ப்பு இருக்கு. படிச்சவகத்தானே நீங்க எல்லாம்? ஈரான், இந்தோனேஷியா மாதிரி நாடுகளில் இருந்துவேனா (கூட்ட வழிபாடு கூட்டம் அதிகம் அங்கு) தப்பிக்க நினைத்தால் பரவாயில்லை. ஐயோ என்ன எழுதறது என்றே எனக்கு விளங்கவில்லை. நான் நல்லவனா கெட்டவனா?.
Rate this:
Share this comment
Anandaraj Manjini - Muscat,ஓமன்
23-மார்-202018:46:03 IST Report Abuse
Anandaraj ManjiniAlmost six month holiday here,Living cost very high (no part time job also ) and staying alone in room very painfull...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X