பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

சென்னை: ''விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; அவ்வாறு வரும் தகவல்கள் வெறும் வதந்தி'' என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நோய் தடுப்பின் அவசியத்தை உணர்ந்ததால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதேநேரம் நாய் பூனை உள்ளிட்ட செல்ல விலங்குகள் எந்த கவலையும் இன்றி சுற்றித்திரிந்தன. இந்த விலங்குகளால் நோய் தொற்று பரவாதா என்ற கேள்வி எழுகிறது.


latest tamil news



இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்கம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவும். விலங்குகளிடம் இருந்து நிச்சயம் பரவாது. அவ்வாறு பரவும் என்று யாராவது கூறினால் அது வெறும் வதந்தி; யாரும் அதை நம்ப வேண்டாம். மேலும் கோழிக்கறி முட்டை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என கூறுவதும் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தர் பாலச்சந்திரன் கூறுகையில் ''விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; பரவும் எனக்கூறுவது வதந்திதான்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மார்-202016:52:03 IST Report Abuse
அசோக்ராஜ் குழந்தைகள் உளறுவதைப் பொருட்படுத்த வேண்டாம். மனிதனிடமும் மரக்கட்டை யிலும் தங்கிப் பரவும் கிருமி விலங்கிடம் மட்டும் தங்கிப் பரவாதாம். சாமி சொல்லிடுச்சு.
Rate this:
Cancel
Ganapathy - Bangalore,இந்தியா
23-மார்-202011:13:45 IST Report Abuse
Ganapathy ஐயா தயவு செய்து ஒரு பேராசிரியர் அளிக்கும் விளக்கத்திற்கு மதிப்பு கொடுங்கள், முடியுமானால் வெங்கடேஸ்வரன் எழுதிய கட்டுரையை படியுங்கள் .
Rate this:
Cancel
23-மார்-202008:56:13 IST Report Abuse
ருத்ரா Pet animal ஐ கட்டிப்பிடித்து உறங்கும் சிறுவர்கள் பிஸ்கட்டை ஒருமுனை தன்வாயிலும்மறு முனையை வளர்ப்பு நாய் மெல்ல கடித்து உண்பதை வீடியோ எடுத்து ரசிக்கும் சில பெற்றோர்கள். மிருகங்களை ஒரு டிஸ்டன்ஸ் வைத்து பழகினால் தவறில்லை. அன்பு வேறு அதன்மூலம் வரும் டிக்ஸ் வேறு. அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே விஷம் தானே. நம் சுத்தம் நம் கையில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X