பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.14ல் ஆரோக்கிய சூழல் திரும்பும்: மதுரை ஜோதிடர் கணிப்பு

Added : மார் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஏப்.14ல் ஆரோக்கிய சூழல் திரும்பும்: மதுரை ஜோதிடர் கணிப்பு

மதுரை: ''கிரகங்களின் மாற்றங்களால் தலைகாட்டும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்னைகள் ஏப்.14ல் முழுமையாக நீங்கி, ஆரோக்கிய சூழல் திரும்பும்,'' என மதுரை திருவாப்புடையார் கோயில் ரிக்வேத கனபாடிகள் மகன் ஜோதிடர் ஐயப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 12 ராசிகளில் தனுசு ராசியில் 45 நாட்களாக செவ்வாய், சனி, கேது, குரு சேர்ந்து இருக்கின்றனர். பொதுவாக செவ்வாய், சனி சேர்ந்தால் விபத்து, வெள்ளம், போர் அதிகம் ஏற்படும். கேது சேர்க்கையால் தற்போது வைரஸ் தாக்குகிறது. மார்ச் 22 இரவு 2:00 மணிக்கு தனுசு ராசியில் இருக்கும் செவ்வாய், மகர ராசிக்கு செல்கிறார். மார்ச் 28ல் தனுசு ராசியில் இருக்கும் குரு, மகர ராசிக்கு அதிச்சாரத்தில் செல்கிறார். சூரியன் ஏப்.,14ல் மேஷத்திற்கு வருகிறார்.

எனவே மார்ச் 22 இரவு 2:00 மணிக்கு மேல் ஒரு முன்னேற்றமும், மார்ச் 28ல் குரு மாறுவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படும். ஏப்., 14ல் சூரியன் மாற்றத்தால் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகள் முழுமையாக நீங்கி, ஆரோக்கிய சூழல் திரும்பும். ஏப்., முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தாக்கம் குறையும், செப்.1ல் தனுசில் இருந்து கேது விருச்சிகம் செல்வதால் இது போன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்ந்து விடும். இதனால் இதுபோன்ற தாக்கங்களை கண்டு பீதியாகாமல் இறை நம்பிக்கையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
23-மார்-202018:54:24 IST Report Abuse
ocean kadappa india ஜோதிடர் அய்யப்பனின் கணிப்பு மிக சரி.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Manama,பஹ்ரைன்
23-மார்-202018:52:40 IST Report Abuse
Vijay Kumar உங்கள் வாக்கு பலிக்கட்டும், கணிப்பு நூற்றுக்கு நூறு நிஜமாக எல்லோரும் இறைவனை வேண்டுவோம். உலகையே உலுக்கும் இந்த கொடிய நோயிலிருந்து மக்கள் மீள வேண்டும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, நோய் பயம் நீங்கி மக்கள் வழமையான வாழ்க்கைக்கு சீக்கிரமே திரும்ப வேண்டும் என பிரார்த்திப்போமாக.
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
23-மார்-202009:18:52 IST Report Abuse
Arasu போய் மோடி கிட்ட சொல்லுங்க ஏப்ரல் 14 சரியாகிடும்.... ஊரடங்கு எல்லாம் தேவையில்லை
Rate this:
Share this comment
24-மார்-202001:05:50 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...)உன்னை போன்ற கிருமிகளிடம் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு முக்கியம் என்பதை எங்கள் மோடி அறிவார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X