கொரோனா முன்னெச்சரிக்கை 21 கைதிகள் விடுதலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை 21 கைதிகள் விடுதலை

Added : மார் 23, 2020
Share

தேனி : கொரோனா நோய் தொற்று நடுப்பு நடவடிக்கையின் காரணமாக தேனி மாவட்டச் சிறையில் இருந்து, தீவிர குற்றங்களில் ஈடுபடாத 21 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் சிறைக் கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து சிறை கைதிகளை விடுவிக்க ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என, நீதித்துறை, சிறைத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தது.

இதனால் சிறை நிர்வாகம் தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 பேர், பெரியகுளம் கிளைச் சிறையில் உள்ள 9 பேர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் உள்ள 10 பேர் என மொத்தம் 49 கைதிகளை விடுவிக்க ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பாலியல் குற்றங்களிலும், கொலை வழக்குகளிலும், திருட்டுக் கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்கள்.

மீதமுள்ள 175 பேர் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என, சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில், முதன்மை மாவட்ட நீதிபதி (பொ)அப்துல்காதரிடம் பட்டியல் சமர்பிக்கப்பட்டது. பரிசீலித்த நீதிபதி மணல் திருட்டு, சிறிய குற்றங்களில் ஈடுபட்டு மாவட்ட சிறையில் உள்ள 21 பேரை விடுதலை செய்ய அனுமதி அளித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் மாவட்ட சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X