பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பில் உள்ளவர்களிடம் தினமும் அலைபேசியில் விசாரணை

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கம்பம் : கொரோனா வைரஸ் தொற்று தடுக்க மத்திய ,மாநில அரசுகள் போராடி வருகின்றனர். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு வளையத்திற்குள் 50க்கும்மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இதில் உள்ளவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, எப்படி கண்காணிப்பு செய்யப்படுகிறது என்று சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, கொரோனா குணப்படுத்த முடியாத நோய் அல்ல.

இந்த வைரஸ் பாதித்திருந்தால், சம்பந்தப்பட்டவரின் உடலில் 14 நாட்கள் தங்கியிருக்கும். அதற்குபின் தான் காய்ச்சல் அறிகுறி தெரியும். எனவே தான் அரசு மார்ச் 31 வரை தனிமைப்படுங்கள் என்று கூறுகிறது. அதாவது மார்ச் 31 க்கு பின் காய்ச்சல் அறிகுறி இல்லாதவர்களுக்கு தொற்று இல்லையென்பது உறுதியாகி விடும். வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலும் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இவர்களிடம் தினமும் இரண்டு முறை அலைபேசி மூலம் தகவல் கேட்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல் அப்பகுதி கிராம செவிலியர்கள் சம்பந்தப்பட்டவர்களின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மார்ச் 31 க்கு பின் நிலைமை தெளிவாகும். முடிந்தவரை தனிமையாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202007:13:54 IST Report Abuse
ஆப்பு மத்திய அமைச்சரே ஒரு நோயாளியை அன்பா விசாரிச்சாராமே.. இப்பவும் விசாரிக்கறாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X