சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெண்ணியாறு வனப்பகுதியில் காட்டுத் தீ மரங்கள், சிறு வனஉயிரினங்கள் பாதிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கம்பம் : மேகமலை வனஉயிரின சரணாலயப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் காடுகளில் தீப்பற்றி எரிவதால், மரங்கள், மூலிகைகள், சிறு வனஉயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கோடைகாலத்தில் காடுகளில் தீ பிடித்து எரிவது வழக்கமாகிவிட்டது. தீயை அணைக்க சில மாதங்களுக்கு முன்பே தீயணைப்புத்துறையினர் பயிற்சி தந்தனர். தீத் தடுப்பு கோடுகள் வனத்துறையினரால் போடப்பட்டது. இருந்தபோதும் வனப்பகுதியில் தீ பிடிப்பது தொடர்கிறது. தேனி வனக்கோட்டம், மேகமலை வனஉயிரின சரணலாயப்பகுதிகளிலும் காடுகளில் தீ பிடித்து எரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை முதல் வெண்ணியாறு, சுருளியாறு பகுதிகளில் பெரிய அளவில் தீ பற்றி எரிந்தது. இதில் ெஷட்யூல் மரங்கள், மூலிகைககள், சிறிய வனஉயிரினங்கள் பாதிக்கப்பட்டன.வழக்கம் போல தீயை அணைக்க வனத்துறையினர் ஆர்வம் காட்டவில்லை. காரணம் அதற்குரிய உபகரணங்கள் இல்லை. தேவையான பணியாளர்களும் இல்லை. மேலும் காட்டுத்தீயை அணைக்க சென்று விபத்து ஏதேனும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இருப்பதால், வனத்துறையினர் இரவில் செல்வது இல்லை.

பகலில் சென்று அணைக்க முயற்சி செய்கின்றனர். சேட்டிலைட் சென்சிங், முன்கூட்டியே தகவல், தீத் தடுப்பு கோடுகள் போடுவது, தீயணைப்புத்துறை பயிற்சி என்ற அனைத்தும் பயனற்றதாக போய்விடுகிறது. கோடையில் காடுகளில் தீ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக விட்டது என்று இயற்கை ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X