பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம். பரிவர்த்தனைகளில் சானிடைசர் உபயோகப்படுத்த வேண்டுகோள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

கம்பம் : வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க செல்லும் போது, சானிடைசர் உபயோகப்படுத்த வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக ஏ.டி.எம். வாசல்களில் அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தடுக்க தனிமைப்படுத்திக் கொள்வதே இந்த நோயை குணப்படுத்த சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.காற்றின் மூலம் பரவாவிட்டாலும், தொற்று ஏற்பட்டவரை தொட்டாலும், அவர் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினாலும், தொற்றிக் கொள்ளும் என்கின்றனர். குறிப்பாக வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது, இந்த வைரஸ் பரவுவதற்கு கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க செல்லும் போது சானிடைசர் பயன்படுத்த வங்கி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏ.டி.எம். களில் தினமும் பலர் வந்து பணம் எடுக்கின்றனர். தொற்று இருப்பவர் பணம் எடுத்து சென்ற பிறகு, அங்கு மற்றொருவர் வந்து பணம் எடுத்தால், அவருக்கு கண்டிப்பாக தொற்று ஏற்படும். எனவே, பணம் எடுப்பதற்கு முன்பும், பணம் எடுத்தபின்பும் சானிடைசர் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் ஏ.டி.எம். மையங்கள் முன்பு வைக்க உள்ளோம் என்றார். அதேபோல பெரிய கடைகள், மால்கள்,ஓட்டல்களில் பி.ஓ.எஸ். கருவிகளை பயன்படுத்தும் போதும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் கொரோனா தொற்று பரவுவது குறையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்றும் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X